நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை,
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே,
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினைப்பதெல்லாம்...)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது,
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை,
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினைப்பதெல்லாம்...)
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது,
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்,
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
(நினைப்பதெல்லாம்...)
கவிஞர் கண்ணதாசன்
About Me
01 October 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment